‘சித்துவிலி சித்தம்’ எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு வை.எம்.சி.ஏ பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நான்காவது தடவையாக நடார்த்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் பிரணவனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
நிகழ்வில் தென்எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரட்ணம், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் பிரபாகரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.