24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீனக் குடியரசு வழங்கிய நிதி திறைசேரிக்கு!

அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்திற்காக, சீனக் குடியரசால் வழங்கப்பட்ட நிதி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை, இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, சீன மக்கள் குடியரசினால் வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபா நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவசரகால மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசில் இருந்து கிடைக்கவுள்ள 10 மில்லியன் யுவான் பொருள் உதவி மற்றும் பொருட்கள் பெறப்பட்டவுடன் முறையான கணக்குப்பதிவுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட உள்ளன.மேலும், சேதமடைந்த வீடுகள் மற்றும் உடைமைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல், வீடுகளின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளையும் அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்தின் ஊடாக விரைவாக நிறைவேற்றவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles