சீன மக்கள் குடியரசு இலங்கைக்கு 600 மில்லியன் யுவான் நிதி உதவியை வழங்கியுள்ளது.
இலங்கை ரூபாயில் 16.5 பில்லியன் என இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிக்கையில் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கொவிட் – 19 நிலைமையை அடுத்து கிராமப் புறங்களில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், கல்வி மற்றும் நீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
அதில் சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் வன் சியாஓதாம் மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். அட்டிகல ஆகியோர் கடந்த 9 ஆம் திகதி கையெழுத்திட்டனர்.