1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் சீனாவின் ஷங்காய் நகரத்தை திங்கட்கிழமை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாரிய காற்றும் வீசியதோடு, பலத்த மழையுடன் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
ஷங்காய் நகரத்திலிருந்து 4 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு விமானங்கள், படகுகள் மற்றும் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவசர உதவியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஷங்காயில் உதவி வழங்க தயாராக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.