மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்ந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்லல் மற்றும் சுகாதரத்துறையில் செயற்றிட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று இன்று ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மருத்துவர்கள், வைத்தியதுறை சார் அதிகாரிகளும் பங்கெடுத்தனர்.
சுகாதாரத்துறையால் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு செயற்றிட்டங்கள், செயற்பாடுகளை மக்கள் மத்தியில் எவ்வாறு எடுத்துச் செல்வது, சுகாதாரத்துறையுடன் ஊடகங்கள் இணைந்து பணியாற்றுதல் தொடர்பிலும் விளக்கங்கள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் செயலமர்வில் கலந்துகொண்டனர்.