2025 மே மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 91 ஆயிரத்து 785 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலானோர் வருகை தந்துள்ளனர்.
அந்நாட்டிலிருந்து 31 ஆயிரத்து 635 பயணிகள் வருகை தந்துள்ளதுடன் இது 34.5 வீதமாக பதிவாகியுள்ளது.
மேலும், பிரித்தானியாவிலிருந்து ஆறாயிரத்து 195 பேரும் சீனாவிலிருந்து ஆறாயிரத்து 43 பேரும் ஜேர்மனியிலிருந்து ஐயாயிரத்து 526 பேரும் பங்களாதேஷிலிருந்து நான்காயிரத்து 693 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை ஒன்பது இலட்சத்து 88 ஆயிரத்து 669 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.