ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நேற்று வரை 3 ஆயிரத்து 828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு ஆயிரத்து 295 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2 ஆயிரத்து 425 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 28 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 80 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.