ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. நாளை காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரையான காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 41 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகளுக்காக ஆயிரத்து 713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.