24 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மன்னாரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்!

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கினர். குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா, முன்னாள் யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணன் அரசியல் ஆய்வாளர் என்.நிலாந்தன் முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உரையாற்றியிருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles