முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் அவர் இது குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
எந்த கட்சியுடனும் சேராமல் சுயேட்சை வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார். இதேவேளை ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவை சரத்பொன்சேகா பெற்றுள்ளார் ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்ததைகள் தொடர்கின்றன என முன்னாள் இராணுவதளபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.