ஜனசெத பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்ல சீலரத்ன தேரருக்கு ஆதரவு கோரி, யாழில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் இன்று காலை பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்ல சீலரத்ன தேரருக்கு ஆதரவு வழங்குமாறு கோரும் துண்டுப்பிரசுரங்கள் இதன்போது விநியோகிக்கப்பட்டன. பத்தரமுல்ல சீலரத்ன தேரர், ஜனசெத பெரமுனவின் ஆதரவாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.