ஞானசார தேரருக்கு 9 மாத சிறை

0
10

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை இன்று வியாழக்கிழமை (09) கொழும்பு நீதவான் நீதிமன்றம்  விதித்துள்ளது.

9 மாத சிறைத்தண்டனையுடன் 1,500 ரூபா அபராதத்தை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன  விதித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து, இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனையை விதித்தது.