டிப்பர் விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு!

0
6

யாழ். திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில், என்ற மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென நகர்ந்ததால், வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன் அவர் மீது ஏறியுள்ளது. இதையடுத்து அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.

33 வயதுடைய டிப்பர் சாரதி கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.