அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது, மீண்டும் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் மைதானத்தில் டொனால்ட் ட்ரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் ட்ரம்ப், தப்பித்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் நடாத்திய நபரும், கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து மத்திய சட்ட அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்திவருகிறது. முன்னாள் அதிபர் ட்ரம்ப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது நிம்மதியளிக்கிறது. நான் கூறுவது போல் அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை. ட்ரம்பிற்கு தேவையான உரிய பாதுகாப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என கூறப்பட்டுள்ளது.