தண்ணீர் பௌசர் விபத்தில் சாரதி பலி!

0
9

வீதியை விட்டு விலகிய  தண்ணீர் பௌசரின் இயந்திரம் கழற்று ஓடி விபத்துக்கு உள்ளானதில், மூன்று பிள்ளைகளின் தந்தையான, அந்த பௌசரின் சாரதி, சரத் சோமசிறி மரணமடைந்தார்.

இறக்குவானை- பொத்துபிட்டிய பிரதான வீதியில் மாணிக்க வத்த பகுதியிலயே இந்த விபத்து புதன்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது. இயந்திர கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

குறித்த வீதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.  அதற்கு தண்ணீர் விநியோகித்து வந்த பௌசரே விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அவரது சடலம் இறக்குவானை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொத்துப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.