28 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழர்களுக்கு
கிடைக்கப்போவது?

தென்னிலங்கையின் அரசியல் கொந்தளிப்பு தமிழர்களுக்கு எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் – ஏற்படுத்துமா – என்னும் கேள்விகள் தமிழ் சூழலிலுண்டு. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிய தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை சரி செய்யும் நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. ஒரு புறம் ‘கோட்டா கோ ஹோம்’-போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வை பதவி விலகுமாறு கோரிவருகின்றனர்.
இந்தப் பின்னணியில்தான், புதிய பிரதமர் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. பிரதமராக எவர் நியமிக்கப்பட்டாலும் இப் போதைக்கு தமிழர் விவகாரம் ஒரு விடயமாக இருக்கப் போவதில்லை. ஏனெனில், இடைக்கால அரசாங்கத்தின் முதல் பணி, பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை ஓரளவு மூச்சுவிடச் செய்வதுதான். அது அவசியமான பணியென்பதில் முரண்பட ஏதுமில்லை. ஏனெனில், மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மூச்சுவிட வேண்டியிருக்கின்றது.
ஆனால், தமிழர் அரசியலை பொறுத்தவரையில், எந்தவொரு புதிய மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. அதற்கான வாய்ப்புக்களும் இல்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தலுக்கு பின்னர்தான், சில மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். இதற்கிடையில், நிறை வேற்றதிகாரத்தை குறைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டால், அந்த யோசனையுடன் மாகாண சபையை சுயாதீனமாக இயங்கச் செய் வதற்கான, சில ஏற்பாடுகள் தொடர்பில் கூட்டமைப்பு சில கோரிக்கைகளை முன்வைக்கலாம். இது தவிர, வேறு எதனையும் தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது.
இலங்கையின் அரசியலில் அடிப்படையான கட்டமைப்புசார் மாற்றங்கள் ஏற்பட்டாலன்றி, எதனையும் செய்ய முடியாது. அவ்வாறான அடிப்படையான மாற்றங்கள் எவையும் உடனடியாக நடக்கப் போவதில்லை. ஏனெனில், அதற்கான அரசியல் புரிதலுடன் ஒரு புதிய சிங்கள தலைமுறை வெளியில் வரவில்லை. இப்போது வெளியில் வந்திருக்கும் தலைமுறை, அடிப்படையில் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சிக்கு எதிரானது. அவர்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம்,
என்னும் ஆவேசத்தில் இருக்கும் தலைமுறை.
பொருளாதார நெருக்கடி பாரதூரமாக அவர்களை தாக்காதிருந்திருந் தால், இந்தளவிற்கு ராஜபக்ஷக்களுக்கு எதிராக அவர்கள் திரும்பியிருக்க மாட்டார்கள். தொடர்ந்தும் ராஜபக்ஷக்களின் இனவாத, பௌத்த மாயைக்குள் சிக்குண்டு, தமிழர்களை மட்டுமே விரோதிகளாக சிந்தித்திருப்பர். ஆனால், இப்போது தாங்கள் இனவாதத்தின் பெயரால், மதவாதத்தின் பெயரால், ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்னும்
குற்றவுணர்வும், ஆவேசமுமே அவர்களிடம் மேலோங்கியிருக்கின்றது. இந்த ஆவேசம் அடங்கியவுடன், அவர்கள் மீளவும் பழைய அரசியல் முறைமைக்குள் காணாமல் போய்விடலாம். ஏனெனில், அடிப்படையான மாற்றங்கள் தேவையென்னும் நோக்கில் அவர்கள் ஒன்றுபடவில்லை. அதற்கான தலைமைத்துவமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
ஆனால், இனவாதம் – மதவாதத்தை கடந்து சிந்திக்க வேண்டு மென்னும் புரிதல் படித்த சிங்கள இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், அவற்றுக்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கப் போவது யார் -என்னும் கேள்வியில்தான், அவர்களின் எதிர்கால செயல்பாடுகள் தங்கியிருக்கின்றன. எனவே, இன்றைய நிலையில், எவர் பிரதமராக வந்தாலும் – தமிழர் பிரச்னையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. மேலும் எதிர்காலத்திலும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழர் தலைமைகள் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்கின்றனர் – அதற்காக எவ்வாறு ஒற்றுமையுடன்,
தந்திரோபாயமாக செயலாற்றுகின்றனர் என்பதில்தான், விடயங்கள் தங்கியிருக்கின்றன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles