தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக, மட்டக்களப்பு நகரில் பிரசாரம்

0
65

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையிலான பிரசார நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பிரசார நடவடிக்கைகளில், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம், வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தை என பல்வேறு இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
செய்யப்பட்டன.