தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் ஊடாக, வவுனியா இராசேந்திரன்குள கிராமத்தில் நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கு அமைக்கப்பட்ட வீடு இன்று கையளிக்கப்பட்டது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பெண்ணுக்கு 8 இலட்சம் ரூபா செலவில் நடுத்தர வீடு, குடிநீர் வசதி மற்றும் மலசலகூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவர் வி.விநோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சி.சன்முகானந்தன் மற்றும் பொது மக்கள் என பங்கேற்றனர். இந்த திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பொறியியலாளர் குழுமத்தினால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.