தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரித்து யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் நேற்றிரவு தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது.
இணுவில் அண்ணா சனசமூக நிலைய முன்றலில் குறித்த தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது.
கூட்டத்தில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி.நிரோஸ், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்ஷன், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.