நடைபெற்று முடிந்த 10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவான
அஷ்ரப் தாஹிருக்கு நேற்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச மக்களால், அஷ்ரப் தாஹிருக்கான வரவேற்பு நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. நிந்தவூர் ஜூம்மா பள்ளிவாசலுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது.