திங்கள் முதல் யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக்குகள் புதிய இடத்தில்!

0
350

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெறும் மருத்துவக் கிளினிக்அனைத்தும் விக்டோரியா வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய கட்டடத் தொகுதியில் மருத்துவ கிளினிக் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நடைபெறும்.

ஏனைய கிளினிக்குகள் அனைத்தும் பழைய இடங்களிலேயே இயங்கும்.

மருத்துவ கிளினிக்குக்கு வரும் பொதுமக்கள் நேரடியாக விக்டோரியா வீதியினூடாக வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக இருக்கின்ற கட்டிட தொகுதியில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்