திருகோணமலை தோப்பூர்பகுதியில், கனரக வாகனம்,குடைசாய்ந்து விபத்து

0
69

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் கனரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


மூதூர் பொலிஸ் பிரிவின் தோப்பூர் பகுதியில், வீதியின் அருகே உள்ள வாய்க்காலுக்குள் குறித்த வாகனம் இன்று மாலை குடைசாய்ந்து, விபத்துக்குள்ளானது. வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.