24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத் தகவல் திணைக்களமும் இனைந்து ஏற்பாடு செய்த இந்த செயலமர்வில், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடார்த்துவதற்கு ஊடகங்களின் பங்கு, தேர்தல் அறிக்கைகளில் ஏற்படக்கூடிய சவால்களை இனங்கண்டு அவற்றைக் கையாள்வதற்கான தீர்வுகளை முன்வைத்தல் மற்றும் தேர்தல் காலத்தில் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் மற்றும் அவற்றை நிறைவேற்றுதல் போன்ற விடயங்கள் குறித்து செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.

செயலமர்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமின்த ஹெட்டிராய்சி, மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்துக்க குலரட்ன, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் வன்ன பி.டி.சில்வா, திருகோணமலை மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலர் ஆர். சசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles