திருகோணமலை மூதூர் -கட்டைபறிச்சான் இறால் பாலத்தை ஊடறுத்து சுமார் இரண்டு அடி உயரத்திற்கு நீர் பாய்ந்து வருவதால், இவ் வீதியூடாக பயணம் செய்வோர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாளை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் இப் பாலத்தினூடாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வாக்காளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
உரிய அதிகாரிகள் மாற்று வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோப்பூர்,பள்ளிக்குடியிருப்பு,அம்மன்நகர்,கணேசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மூதூர் நகருக்குச் செல்வதற்கு இப் பாலத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.