திருகோமணலை மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக தமது கிராமத்திற்குள் உட்புகும் காட்டு யானைகள், பயன்தரு மரங்களை அழித்துச் சேதப்படுத்துவதாகக் குறிப்பிடும் பிரதேச மக்கள்,
இரவு வேளைகளில், அச்சத்துடன் உறங்குவதாக கவலை வெளியிட்டனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள், யானை பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மல்லிகைத்தீவு மக்கள்
கோரிக்கை விடுக்கின்றனர்.