26.4 C
Colombo
Thursday, August 11, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருமலை தனியார் பேருந்து
உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்திருந்த போதிலும் தமக்கு போதிய அளவிலான எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் முன்பாக பேருந்துகளைக் நிறுத்தி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

முன்னதாக நாளொன்றுக்கு 2500 லிட்டர் டீசல் வழங்கப்படுவதாக டிப்போ அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது நாளொன்றுக்கு 750 லிட்டர் டீசல் வழங்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த டீசலை பெற்றுக் கொள்வதற்கு தாம் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் குறிப்பாக தமது பேருந்துகள் சேவையில் ஈடுபடும் நேரத்தில் தம்மை வரிசைகளில் காத்திருக்க வைத்துவிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதனிடையே, ஆர்ப்பாட்டம் காரணமாக பொதுமக்கள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் பல மணி நேரம் பேருந்துகளுக்காக காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

சரத் பொன்சேகாவின், ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின், 'பீல்ட் மார்ஷல்' பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு, அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.அண்மையில், சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துகள்...

அடுத்த சம்பள உயர்வுக்கான பணி ஆரம்பம்!

இ.தொ.கா முன்வத்த 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி கம்பனிகள் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தன் மூலம் கம்பனிகளின் அடாவடித்தனத்துக்கு தக்க பாடத்தை இ.தொ.கா புகட்டியுள்ளதுடன், குறித்த...

பாடசாலை மாணவர்கள் துஸ்பிரயோக குற்றச்சாட்டு! காலியில் ஒருவர் கைது!

காலி பிரதேசத்தில் பல பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது. காலி பிரதேசத்தில் உள்ள பல...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சரத் பொன்சேகாவின், ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின், 'பீல்ட் மார்ஷல்' பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு, அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.அண்மையில், சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துகள்...

அடுத்த சம்பள உயர்வுக்கான பணி ஆரம்பம்!

இ.தொ.கா முன்வத்த 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி கம்பனிகள் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தன் மூலம் கம்பனிகளின் அடாவடித்தனத்துக்கு தக்க பாடத்தை இ.தொ.கா புகட்டியுள்ளதுடன், குறித்த...

பாடசாலை மாணவர்கள் துஸ்பிரயோக குற்றச்சாட்டு! காலியில் ஒருவர் கைது!

காலி பிரதேசத்தில் பல பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது. காலி பிரதேசத்தில் உள்ள பல...

போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது!

போதை மாத்திரைகளுடன் 41 வயதுடைய சந்தேக நபரொருவர் ஓட்டமாவடி மாவடிச்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சுமார் 1,100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,...

மட்டக்களப்பு நகர் லொயிஸ் அவனியூர் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகர் லொயிஸ் அவனியூர் வீதியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.ஹொட்டியாராச்சி...