24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

அம்பலாங்கொடை ஊரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்க இலக்கான ஆணும் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் அம்பலாங்கொடை குளிகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான கணவன் மனைவி என தெரியவந்துள்ளது.உயிரிழந்த இருவரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.தற்போதைய விசாரணையின்படி T 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles