24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தூதரகத்தை மூடினாலும் உதவிகள் தொடரும் – நோர்வே அரசாங்கம்

நோர்வே அடுத்த ஆண்டு கொழும்பில் உள்ள தூதரகத்தை மூடினாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகள் தொடரும் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெலாட் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே தூதுவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். 1960களில் மீன்பிடித் துறையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட 60 வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு நோர்வே வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும் தகவல் தொழில்நுட்பம், கடல் மற்றும் கடல் அறிவியலுக்கு கூடுதலாக மீன்வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விவசாயம் ஆகியவற்றில் முதலீடுகளை செய்யுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles