27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

தென் ஆபிரிக்க அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மண்ட் ரூட்டு காலமானார்

உள் நாட்டிலும் உலகெங்கும் அறியப்பட்ட மூதாளரான தென் ஆபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மண்ட் ரூட்டு (Archbishop Desmond Tutu) தனது 90 ஆவது வயதில் காலமாகிவிட்டார்.

உலகெங்கும்அநீதி இழைக்கப்பட்ட இனங்கள் மீதுதீவிர இரக்கம் கொண்டிருந்தவர் ரூட்டு.நிறவெறி ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தனது வாழ் நாள் முழுவதையும்அர்ப்பணித்தவர்.

இனவெறியற்ற தென்ஆபிரிக்காவின் வரலாற்றை எழுதிய ஒரு தலைமுறையில் மிக முக்கியமான ஒரு மனிதர் அவர்.நிறவெறி எதிர்ப்பின் உலக சின்னமாக விளங்கிய நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தவர்

டஸ்மன்ட் டுட்டு. தென்ஆபிரிக்காவில் 1948 முதல் 1991 வரை கறுப்புஇனப் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சிறுபான்மை வெள்ளை இன அரசுமுன்னெடுத்த இனப் பிரிவினை, மற்றும் பாகுபாட்டுக் கொள்கைகளை முடிவுக்குக்கொண்டுவரப் போராடிய இயக்கத்தின் முக்கிய உந்து சக்திகளில் ஒருவராக விளங்கியவர் அவர் .

ஆபிரிக்க நிறவெறி அமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்த கிளர்ச்சிகளுக்காக அவருக்கு 1984இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென் ஆபிரிக்காவின் நிற வெறி ஆட்சிக்காலத்தின் கடைசி அதிபராக விளங்கியஎப்டபிள்யூ டி கிளார்க் (FW de Clerk) அவர்களது மரணம் நிகழ்ந்து சிறிது காலத்தில்டுட்டுவின் மறைவு நேர்ந்திருக்கிறது.

நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட சர்வதேச மூதாளர் அமைப்பின் (The Elders) முக்கிய உறுப்பினராக மனித உரிமை மீறல்களுக்காக அடிக்கடிகுரல் கொடுத்து வந்தவர்.
தனது 80 ஆவது பிறந்த நாளில் செய்திநிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர், “உங்களது பெயர் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் நினைப்பதே ஒருமரியாதை. அதுவே பெரும் பாக்கியம்”என்று கூறியிருந்தார்.
தென் ஆபிரிக்கா கறுப்பின ஆட்சியில் இருந்து விடுதலையாகி நெல்சன் மண்டேலா அதிபராகப்பதவியேற்ற சமயத்தில் ஒரே நிற ஆட்சிநடைபெற்ற தனது நாட்டைப் பல்லின-பல நிறங்களின் “வானவில் தேசம்”(Rainbow Nation) என்று விளித்து ரூட்டு கூறிய வார்த்தை மிகப் பிரபலமாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்திருந்தது.டெஸ்மண்ட் டுட்டு 1997 இல் முதல் முறையாகப் புரோஸ்டேட் புற்றுநோய் (prostate cancer) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் நத்தார் தினத்துக்கு மறு நாளான இன்று உயிரிழந்திருக்கிறார்.

Related Articles

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

இலங்கைக்கு தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால்...

புதிய கல்வி சீர்திருத்தம்?

அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல்...