தெற்கு ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.மலாக்கா மற்றும் வடகிழக்கு கட்டலேனியா ஆகிய பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை பதிவாகக் கூடுமென அந்த நாட்டு வானிமை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் அங்குள்ள முக்கிய சுற்றுலா வலயங்களிலும் வெள்ளப் பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் கிழக்கு வலென்சியா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் குறித்த பகுதிக்கு மீண்டும் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் வடகிழக்கு ஸ்பெயினில் நேற்றைய தினம் 180 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.