யாழ்ப்பாணம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. இன்றைய தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்று உள்வீதியுலா இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இதன்போது பக்தர்கள் பலர் அங்கப்பிரதட்சணம், காவடிகள், சிதறு தேங்காய்கள் அடித்து தமது நேர்ததிக்கடன்களையும் நிறைவேற்றியிருந்தனர். இன்றைய தேர்த் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேர்த்திருவிழா!
0
23