இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வாவை குறித்த பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு கோரியுள்ளது. தேசிய ஒலிம்பிக் குழுவின் ஒழுக்காற்றுக் குழுவினால் முன்வைக்கப்பட்ட முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய ஒலிம்பிக் குழுவின் நிர்வாக குழுவை அவசரமாகக் கூட்டிஇ தாமதிக்காமல் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்துக்குஇ சர்வதேச ஒலிம்பிக் குழு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது.