தேசிய பொங்கல் விழா : தெல்லிப்பழையில் நிகழ்வு

0
27

நாளையதினம், யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ள குழுவினர், இன்று, யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில், நாளை காலை, பொங்கல் விழா இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பில் இருத்து, கலை கலாசார பண்பாடுகளை பிரதிநித்துவம் செய்யும் விசேட குழு, யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

கடுகதி புகையிரதத்தில், இன்று மதியம் வருகை தந்த பிரதிநிதிகளை, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட பிரதிநிதிகள் வரவேற்றனர்.

தேசிய தைப்பொங்கல் விழா, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளதுடன், கலை நிகழ்வுகள், தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெறவுள்ளன.

இந்த தேசிய நிகழ்வு, புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெறவுள்ளது.