தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் பல்வேறு புதிய திட்டங்களுடன் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை என 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டியிடுகின்றது.
அதில், வவுனியா மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை பல முன்னேற்றகரமான அபிவிருத்தி திட்டங்களுடன், முதலாவது தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.