உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு விரிவாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.