ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப்பணிகளுக்கு நாளை நள்ளிரடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க நாளை நள்ளிரவிற்குப் பின்னர் வேட்பாளர்கள், கட்சிகளுக்கான தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.