நடிகை பியூமி ஹன்சமாலி மற்றும் பிரபல வர்த்தகர் விரஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு,
கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இளங்கசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பியூமி ஹன்சமாலி மற்றும் விரஞ்சித் தம்புகல ஆகியோரின் சொத்துக்கள் தொடர்பில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு, நேற்று மீள பரிசீலிக்கப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக சொத்துக்களைச் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பியூமி ஹன்சமாலி மற்றும் விரஞ்சித் தம்புகல ஆகியோர் தொடர்பில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.