

இலங்கையின் அரசியல் வரலாற்றில் எவரும் எதிர்கொள்ளாத நெருக் கடிகளை, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எதிர்கொண்டு வருகின்றார். நந்தசேன கோட்டபாய ராஜபக்ஷ, தொடர்பில் முன்னரோ, ஓர் அச்சம் கலந்த மரியாதையொன்று சிங்களவர்கள் மத்தியிலிருந்தது. ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாகிவிட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதிக்கு இரண்டு வார காலக்கெடு வழங்கியிருக்கின்றார். இரண்டு வாரங்களுக் குள், அரசியல் முரண்பாடுகளை போக்கி, ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்காது போனால், தான் பதவியிலிருந்து விலகவுள்ளதாக, அவர் தெரிவித்திருக்கின்றார். ஏனெனில், நாடு அரசியல் முரண்பாட்டுக்குள் சிக்குமானால், பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் – நிலை மைகளை சமாளிக்க முடியாமல் போகுமென்றும் அவர் குறிப்பிட்டி ருக்கின்றார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில், மத்திய வங்கியின் ஆளுநர் ஒருவர், ஜனாதிபதிக்கு எச்சரிக்கைவிடுப்பது இதுவே முதல்தடைவையா கும். அந்தளவிற்கு நிலைமை பாரதூரமாக சீர்கெட்டிருக்கின்றது. மத்திய வங்கியின் ஆளுநர் சுயாதீனமாக இயங்கினால் மட்டும்தான், அவரால் நாட்டின் பொருளாதார நிலைமையை சீர்செய்வதற்காக செயலாற்ற முடி யும். அதற்கு ஸ்திரமானதொரு அரசாங்கம் தேவை. இந்த நிலையில் தான், அவர் இவ்வாறானதொரு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.
கொரோனா பெருந்தொற்றிற்கு பின்னர், பல்வேறு நாடுகளும் பொரு ளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தது. இலங்கையும் இதில் ஒன்று. ஆனால் இலங்கை போன்று, ஏனைய நாடுகள் வங்குரோத்து நிலைக்கு செல்லவில்லை. ஏனெனில், அந்த நாடுகளிலும் அனைத்து அரசியல்வாதிகளும் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும்தான் இருந்த னர் என்றில்லை. அங்கும் பிரச்சினைகள் இருந்தன – அரசியல் முரண் பாடுகள் இருந்தன. ஆனாலும் அவர்கள் வங்குரோத்து நிலைமைக்கு
செல்லவில்லை. ஆனால் இலங்கை மட்டும் இதில் எவ்வாறு விதிவிலக்கா னது?
ஆரம்பத்திலிருந்தே, நிலைமைகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை விடவும், பிரச்னைகளை எவ்வாறு தற்காலிகமாக பூசிமெழுகுவது என்ப திலேயே, ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினர். அண்ண னிற்கு பதிலளிப்பது, தம்பிக்கு பதிலளிப்பது, மகனுக்கு பதிலளிப்பது – என்னுமடிப்படையிலேயே, ராஜபக்ஷக்களின் நிர்வாகம் அமைந்திருந் தது. அதன் விளைவையே தற்போது நாடு மோசமானதொரு சூழலுக்குள் சிக்குற வேண்டியேற்பட்டது. இறுதியில் வன்முறையை தூண்டிவிடு
வதன் மூலம் அதிகாரத்தை தக்கவைக்கும் கடைநிலை அரசியலிலேயே, மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்தார். குறுகிய இனவாத அரசியலில் மூலம், அரசியலை நிரந்தரமாக நிர்வகிக்கலாம் என்னுமடிப்படையிலேயே, ராஜபகஷக்கள் செயற்பட்டனர். இதன், விளைவாகவே நாடு மோசமான தொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது.
ஒருபுறம் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பிறிதொரு புறம் நாட் டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான எந்தவொரு மார்க்கமும் தெளிவாக இல்லை. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருக்கும் நிலையில், புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க முடியவில்லை.
ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு ஸ்திர மான அரசாங்கத்தை உருவாக்காது விட்டால், தான் பதவிலிருந்து விலக வுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்குமளவிற்கே நிலைமை கள் இருக்கின்றன. மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர், தனது கல்வியிலும், தனது தனிப்பட்ட மதிப்பிலும் அக்கறை கொண்டிருக்கின் றார். வெறும் பதவியை அவர் அலங்கரிக்க விரும்பவில்லை.