உதன் பெர்னான்டோ இயக்கிய ‘நன் அதர் தான்’ என்ற திரைப்படம் இன்று மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் திரையிடப்படவிருக்கின்றது.
1971 ஜேவிபி கிளர்ச்சியின் பின்னர் அதன் தலைவர்கள் சிறையில் இருந்த காலத்தில் ஜேவிபி இயக்கத்தை
மீள செயற்படச் செய்ய சில தோழர்கள் முயற்சி செய்தபோது அவர்களுக்கு உதவும் ஒரு இளம் கத்தோலிக்க அருட்சகோதரரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து சித்திரா போபகே எழுதிய கதையே திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் இன்று மாலை தந்தை செல்வா கலையரங்கில் திரையிடப்படுவதுடன் அதன் பின்னர் திரைப்படம்
பற்றிய கலந்துரையாடலும் இடம்பெறவிருக்கின்றது.