26.4 C
Colombo
Tuesday, November 5, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நவீன மயப்படுத்தப்பட்ட சதோச நிறுவனம்!

நவீன மயப்படுத்தப்பட்ட சதோச நிறுவனம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2001 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலகுவாகவும், மலிவாகவும் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி மட்டக்களப்பு களியங்காடு பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கான அனைத்து அத்தியாவசிய பொருட்களை ஒரே இடத்தில் கொள்வனவு செய்து கொள்ளும் வகையில் கிழக்கு மாகாணத்தில் நவீனமயப்படுத்தப்பட்டு விஸ்தரிக்க பட்ட சதோச கிளை நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரை அண்டிய பிரதேசமான களியங்காடு பிரதேசத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் இன்று மக்கள் பாவனைக்கு திறந்து வைத்தார்.

சதோச நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு முகாமையாளர் இசான் கொடகம மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் சுகத் குமாரசிறி மற்றும் மதத் தலைவர்கள் சதோச நிறுவன உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles