28 C
Colombo
Saturday, July 13, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாடாளுமன்றத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட வேண்டும் – ஹர்ஷண ராஜகருணா

நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் நாட்டு மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் மாற வேண்டுமாயின் நாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும். அதேபோன்று நாட்டு மக்கள் மத்தியிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.

நாடாளுமன்றம் என்பது மாதிரி தளமாகும். ஆகவே நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாண்மையாளவர்கள் திருடர்களாயின் நாட்டின் பெரும்பாண்மையும் திருடர்களாலேயே சூழ்ந்திருக்கும்.

நாட்டு மக்கள் வாக்களிப்பதன் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாம் நியமிக்கப்படும் போது மக்கள் திறமையானவர்களை தெரிவு செய்ய வேண்டும். அதேபோன்று இந்த விடயத்தில் அரசியல் கட்சிக்கும் இதில் பொறுப்புள்ளது. திறமை வாய்ந்தவர்களையே கட்சிகள் வேட்பாளர்களாக்க வேண்டும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles