திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலிருந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட, கவீந்திரன் கோடீஸ்வரனிற்கு
நேற்றிரவு வரவேற்பளிக்கப்பட்டது.
காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில், வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, கோடீஸ்வரன் வருகை தந்த வேளை, அங்கு திரண்ட மக்கள்
அவருக்கு வரவேற்பளித்தனர்.
வலுவிழந்திருக்கும் மக்களின் காவலனாக தான் தொடர்ந்தும் செயற்படுவேன் என கவீந்திரன் கோடீஸ்வரன் ஆதரவாளர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.