மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேநேரம் மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.