24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் ஏன் இருள் சூழ்ந்துள்ளது உள்ளது தெரியுமா?

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டை பாதித்துள்ள சீரற்ற வானிலையுடன் ஏற்பட்டுள்ள இருள் சூழந்த நிலை குறித்து விளக்கமளித்து அவர் இதனை தெரிவித்தார்.

இந் நாட்டில் வழமையாக காற்றின் தரக் குறியீடு 50 என்ற குறைந்த மதிப்பில் இருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.ஆனால் அண்மையில் பெய்த கனமழை காரணமாக குறியீட்டெண் உயர்வினால், நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை காணப்படுவதாக அவர் கூறினார்.பாதகமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் உள்நாட்டு எல்லைகளில் உள்ள காற்று மாசுபாடுகள் இந்நாட்டினுள் பிரவேசித்தமை இந்த நிலைமைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக அநுராதபுரம், யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 180 ஆக உயர்ந்ததாக அவர் கூறினார்.எவ்வாறாயினும் நாளை (30) இந்த நிலைமை மறைந்துவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், சுவாசக் கோளாறு உள்ள நபர்கள் இது குறித்து அதிக அக்கறை எடுத்து மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles