27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

விசேட அறிவிப்பு : ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காலை வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை : புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாககாங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாககாங்கேசந்துறை கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காங்கேசந்துறையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

Related Articles

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்;டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.வி.எம்.எஸ் எனப்படும் கட்புல ஊடறு தொழில் நுட்ப கருவியின் கட்டணம், துறைமுகத்தில் தங்குமிடம் பற்றாக்குறை மற்றும் ஜஸ்...

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்;டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.வி.எம்.எஸ் எனப்படும் கட்புல ஊடறு தொழில் நுட்ப கருவியின் கட்டணம், துறைமுகத்தில் தங்குமிடம் பற்றாக்குறை மற்றும் ஜஸ்...

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...