மாகாண சபை முறைமை மூலம் நன்மை கிடைத்தால், நிச்சயம் மாகாண சபைகள் அவசியமானதாகும் என, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மாகாண சபை மூலம், நாட்டு மக்களுக்கு பெரும்பாலும் நன்மை கிடைக்கப் பெறுமாயின், மாகாண சபை காணப்பட வேண்டும் என, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (14), கொழும்பில் இராஜாங்க அமைச்சில், மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், மாகாண சபை முறைமை தொடர்பில் ஆலோசனை வழங்கியதை தொடர்ந்து, இக்கருத்தை வெளியிட்டார்.
இரண்டு வருடங்களக்கு முன்னதாக, இந்த மாகாண சபை முறைமையின்றி நாட்டின் செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
ஆயினும், அந்த முறைமையின் ஊடாக, நேற்று (14) நாட்டு மக்களுக்கு பெரும்பான்மையான சேவை வழங்கப்படுகின்றது.
அதற்குள் வழங்கப்படும் நிதிக்கமைய, நாட்டுமக்களக்கு நன்மைபயக்கும் வகையிலான சேவைகள் வழங்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய வேண்டியது எனது பொறுப்பாகும்.
அதேபோல், அரச சேவையும், மாகாண சேவையும் சமமான முறையில் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பிலும் ஆராய வேண்டியது அவசியமானதாகும்.
ஆகவே, அது தொடர்பிலலேயே நான் ஆராய்ந்து வருகின்றேன்.
அந்தவகையில் மாகாண சபையின் ஊடாக நன்மை பயக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படின், நிச்சயமாக மாகாணசபைகள் அவசியமானதாகும்.
அத்துடன், மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டியதும் அத்தியாவசியமானதாகும்.
இது தொடர்பில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும், ஆலோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.
மாகாண சபை முறைமையினுள், சுகாதார சேவைகள் எதற்காக உள்ளடக்க்பபடவில்லை என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஆகவே, நாம் அவர்களுடைய ஆலோசனையையும் பெற்றுக்கொண்டோம்.
அதேபோல், சுகாதார மாகாண சபை முறைமை அவசியம் என, ஏனைய தரப்பினரும் கூறுவர்கள் எனின் அது தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவக்கைகளை எடுப்போம்.
அத்துடன், ஏனையவர்களுடைய ஆலோசனைகளும், கருத்துக்களும் இதன் போது ஏற்றுக்கொள்ளப்படும்.
என குறிப்பிட்டுள்ளார்.
வடமராட்சி வடக்கு மீனவர்களால் யாழில் மௌன பேரணி
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு மீனவர்களால் யாழில் மௌன பேரணியொன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் வடமராட்சி வடக்கு மீனவர்களால் மௌன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்களின் சமாசங்களும், மீனவர் சங்கங்களும் இணைந்து இவ் மௌனப் பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தன.
நல்லூரில் இருந்து ஆரம்பமான இவ் மௌன பேரணியின் போது, இந்திய வல்லாதிக்க அரசே இலங்கை மீனவரின் வாழ்வாதாரத்தை அழிக்காதே, இலங்கை அரசே மீனவர்களின் கண்ணீரை துடைக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற்றுத் தாருங்கள் போன்ற கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இந்திய இழுவைப் படகுகள், இலங்கை எல்லைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுமாறு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில் மகஜர் ஒன்றினையும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையளித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் இந்திய அரசுக்கு தெரியபடுத்துவதாகவும், வேண்டுமென்று இந்திய மீனவர்கள் இப்பகுதிக்கு வருவதில்லை எனவும் ஏற்கனவே இந்த விடயங்கள் தொடர்பில் பலதடவை கலந்துரையாடப்பட்டுள்ளதால், இது தொடர்பில் மீண்டும் இந்திய மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் தெரிவித்திருந்தார்.