இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதல் போட்டி செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அறிவிக்கப்பட்ட இலங்கை அணிக் குழுவில், தனஞ்சய டீ சில்வா, டிமுத் கருணாரத்ன, பத்தும் நிசங்க, குசால் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியுஸ், டினேஸ் சன்டிமால், கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓசத பெர்னான்டோ, அசித பெர்னான்டோ, விஸ்வ பெர்னான்டோ, லகிரு குமார, பிரபாத் ஜெயசூரியா, ரமேஸ் மென்டிஸ், ஜெப்ரி வன்டர்சே, மிலான் ரத்நாயக்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
தனஞ்சய டீ சில்வா தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்ககது.