26.5 C
Colombo
Saturday, October 16, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

நெடுமுடி வேணு என்ற உன்னத சினிமாக் கலைஞன்

மலையாளத் திரைப்பட சினிமாத்துறையினர் தமது பெயரின் முன்னால் தாம் பிறந்த ஊரை இணைத்து தம்மை அடையாளப்படுத்துவது இயல்பு. தமிழ் நாட்டில் இது அரசியல் தலைவர்கள் கையாளும் திராவிடப் பாரம்பரியமாக இருந்தும் வருகின்றது.

அந்த வகையில் தனது பெயரின் ஒரு பகுதியை எடுத்து பிறந்து ஊரையையும் இணைத்து உருவானதுதான் நெடுமுடி வேணு என்ற சினிமா ஆளுமையின் பெயர் ஆகும். கே.வேணுகோபால் என்னும் நெடுமுடி வேணுவின் பூர்வீகம் உல்லாசப் பயண படகு வீடுகளின் இறங்கு/ஏறு துறை ஆலப்புழா அருகில் உள்ள நெடுமுடி.மலையாளத் திபை;படத்துறையிற்கு அப்பால் இந்திய திரைப்படைத்துறையில் அடையாளப்படுத்தப்படும் மிகச் சிறந்த கலைஞர் இவர்.பத்திரிகைத் துறையில் தனது வாழ்வை ஆரம்பித்தவர் நாடக மேடைகளில் நடிப்புகிற்கு கால் பதித்து திரைத் துறையுலகில் நடிகர் என்று அதிகம் அறியப்பட்டாலும் இயக்குனர், இசையமைப்பாளர், திரைக் கதை வசனம் படைப்பவர் என்ற பன்முகத் திறமைச் செயற்பாட்டை உடையவர். கூடவே மிருந்தங்க கலைஞராகவும் தன்னை நிரூபித்திருப்பவர்.

இவர் நடித்திராத பாத்திரம் இல்லை என்றே கூறலாம். கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகன், குணசித்திரப் பாத்திரம் என்று எல்லாப் பாத்திரங்களிலும் நடித்த ஒரு நடிகராக தன்னை உருவாக்கிக் கொண்டவர் இவர்.நாடகத் துறையில் இருந்து சினிமாத்துறையிற்கு நடிப்பிற்காக வந்தபடியால் அதே பாதையில் தனது சினிமாத்துறைப் பயணத்தில் சிம்ம நடைபோட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீது அதிக பக்தியும் மரியாதையும் உடையவர்.அதனால் தான் இவர் பெற்ற மூன்று இந்திய சிறந்த நடிகர் விருதில் முதலாவதை பெறும் போது மேடையில் நடிகர் திலகத்தை கிலாகித்து அவரை நினைவிற்கு கொண்டு வந்து மேடையில் விருதைப் பெற்றுக் கொண்டார்.அனேக திரைப்படங்களில் இவர் கதாநாகன் என்றால் உண்மையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அனேக படங்களில் கதையின் நாயகனாக இவரே இருப்பார்.அதிலும் மிகச் சில காட்சிகளில் தோன்றினாலும் அவ்வாறே கதையின் நாயகனாக ஆளுமை செலுத்துவதாக இவரின் நடிப்பு இருப்பதினால் திரைப்பட இயக்குனர்கள் ‘கூப்பிடுங்கள் நெடுமுடி வேணு ஐ….. அந்த சில நிமிட வரும் கதையின் பாத்திரத்திற்கு அவர்தான் மிகச் சரியானவர் என்று திரைப்படப் பாத்திரங்களை அவருக்கு வழங்கினார்கள்.

திரைப்படம் வெளிவரும் போது அந்த பாத்திரத்தின் வலிமை…. செழுமை…. முழுமை… நெடுமுடி வேணுவின் நடிப்பால் தெரிந்துவிடும்.பாத்திரமாக அவர் மாறிவிடுவது இயல்பிலும் இயல்பு. மலையாளத் திரைப்படங்களில் அதிகம் இழையோடும் யதார்த்தம் அதிலும் சிறப்பாக நடை, உடை, பாவனை, திரைப்படம் உருவாக்கப்படும் களம், தளம், வீடு, கிராமம், வீதி, ஓடை என்று கதாநாயகி வரை அதிகம் செயற்கை அற்ற தன்மைகளை காணமுடியும்.அதிலும் குணசித்திர பாத்திரம் ஏற்று நடிப்பவர்கள் முழுமையாக இயல்பாக சட்டை கூட அணியாமல் வீட்டில் உட்கார்ந்து வாழ்க்கை நடத்தும் சராசரி அடுத்த வீட்டு அச்சன்… சேட்டன்… முத்தச்சன்… ஆசிரியர் என்று அச்சொட்டாக பொருந்துவர்.கதைகளை நம்பி திரைப்படம் எடுக்கும் பல அனுபவம் மிக்க இயக்குனர்கள் கதைகளத்தை சரியாக அமைத்து கதகளி ஆடுவதை அவதானிக்க முடியும் மலையாளத் திரைப்படங்களில்.அதனால்தான் அதிகமான மலையாளத் கலைஞர்கள் இந்தியாவின் சிறந்த சினிமா விருதுகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பெற்றிருப்பார்கள்.

இதற்கு முழுவதுமாக பொருந்துபவர் நெடுமுடி வேணு.இந்திய சினிமா சரித்திரத்தில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படும் நெடுமுடி வேணு இதுவரை மலையாளம், தமிழ் மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா என்னும் மிகப்பெரிய கனவில் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் முத்திரைப் பதித்த ஒரு கலைஞர். நெடுமுடி வேணு 1990ஆம் ஆண்டு ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்துக்காக சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார். 2003ஆம் ஆண்டு, ‘மார்க்கம்’ திரைப்படத்துக்காக, சிறப்பு நடுவர் தேர்வாக தேசிய விருதை வென்றார். 2006ஆம் ஆண்டு திரைப்படம் அல்லாத படைப்பில் வர்ணனை செய்ததற்காக தேசிய விருது வென்றார். இவை தவிர 6 முறை கேரள மாநில விருதுகள், 3 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.தமிழில் சில படங்களில் நடித்திருக்கும் நெடுமுடி வேணு சங்கரின் இந்தியன், அன்னியன் போன்ற படங்களில் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

தற்போது படப்பிடிப்பில் உள்ள இந்தியன் 2 இலும் இவரின் பங்களிப்பு உண்டு. கூடவே அதிகம் பேசப்பட்ட ஞான ராஜசேகரனின் மோகமுள் இல் சங்கீத வித்வான் ரங்கண்ணா பாத்திரத்தில் நடித்திருப்பது நடிப்பின் உச்சம்.மிக இயல்பான நடிப்புடன் நடை போடும் நெடுமுடி வேணுவை தமிழ் திரைப்பட உலகம் தமது ‘இயல்பான’ சினிமாப் படங்களில் இருந்து விலகி பயணப்படும் செயற்பாட்டினால் அதிகம் தன்னுடன் இணைத்துக் கொள்வில்லை என்ற ஆதங்கம் பலருக்கும் உண்டு.சாரதாவும் நெடுமுடி வேணுவும் இணைந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் சோடியாக நடித்த நடித்த ‘ஒரு மின்னாமினுங்கிண்டே நூருங்குவட்டம்’ (Oru Minnaminunginte Nurungu Vettam) அந்த திரைப்படம் பல வருடங்கள் ஆகியும் என் மனதில் விட்டகலா திரைப்படமாக மனத்திரையில் ஓடுகின்றது. அதுவும் சாரதா வேணுவை ‘மார்ஸ்ஸா..’ என்று உருகி உருகி அழைப்பதற்கு அவர்காட்டும் பதில் பாவனை அருமையிலும் அருமை.பிள்ளைகள் அற்ற இந்த வயதான தம்பதியினர் வளர்பு மகளை… பார்வதி ஒன்றை வளர்பதுவும் அவரிடம் அன்பு செலுத்தி திருமணம் வரை சென்று குழந்தையொன்றை பெற்ற பின்பு அவர் இறந்து விடவே அந்த சோகத்தில் அவர்கள் இருவரும் உழலுவதும் தொடர்ந்து அந்த குழந்தையை தமது பேரப்பிள்ளை மீது பாசத்தை கொட்டி வளர்ப்பதும் அதுவும் ஒரு விபத்தில் மரணத்திற்குள் தள்ளப்பட்டு காப்பாற்றப்படுமா..? இல்லையா..? என்று துடிப்புடன் நகரும் திiரைப் படத்தில் கண்களை அசைக்காமல் திரைப்படத்துடன் முழுமையாக ஒன்றி அந்த வயதான தம்பதியினரின் பிரார்த்தனையுடன் நாமும் இணைந்து மன்றாடுவதுமான பாத்திரப் படைப்பு நெடுமுடி வேணுவும் சராதாவும் ‘ப்… பா….” சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருப்பார்கள்.

முடிந்தால் ஒரு தடவை அந்த திரைப்படத்தைப் பாருங்கள்… கூடவே அந்த உன்னத கலைஞனின் சில தரைபடங்களை மலையாளத்தில் பாருங்கள். மலையாளம்தான் தமிழ் போல் புரியப்படக் கூடிய மொழி மொழிதானே. மொழி மாற்றம் செய்யாத திரைப் படத்தை பார்த்தால்தான் நெடுமுடி வேணுவின் அந்த நகைச்சுவை இழையோடும் அன்பான வாயிற்குள் எதனையோ வைத்தபடி பேசுவது போன்ற அந்த பாங்கு மிக அருமையாக இருக்கும். முற்போக்கு சிந்தனையுடைய நெடிமுடி வேணு எளிமையானவர், இனிமையானவர் அவர் தெரிவு செய்யும் பாத்திரங்கள் கூட சமூகத்திற்கு நற்செய்தி கூறும் விதமாகவே அமைந்திருக்கும் அந்த வகையில் அவரை தோழர் என்று அழைத்து விடை கொடுகின்றோம்மலையாளத்தின் முன்னணி மூத்த நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம் உடன் கோலோச்சிய இந்த நான்கு தசாப்தங்கள் மூன்று தலைமுறைக்கு மேற்பட்ட நடிகன் நெடுமுடி வேணு. தற்போதைய இளம் சினிமா நடிகர்களான துல்கர் சல்மான், பஹத் பாசில், நெவின் புல்லி போன்றவர்களுடனும் இணைந்து கதகளி ஆடியிருப்பார் திரைப்பட நடிப்பில். அதுவும் பஹத்துடன் இவர் நடித்த அண்மைய படமான ‘நோர்த் 24 காஹம்’North 24 Kaatham) படத்தில் கோபாலன் என்கிற ஓய்வுபெற்ற ஆசிரியர் கதாபாத்திரம். திருவனந்தபுரம் செல்லும் வழியில் காதல் மனைவியின் உடல்நிலை சரியில்லை என்ற செய்தியைக் கேட்டு மீண்டும் ஊருக்கே திரும்பும்போது, அந்த ‘கடையடைப்பு’ நாளில் நடக்கும் சம்பவங்களும், சந்திக்கும் மனிதர்கள்தான் கதை.

இந்த திரைப்படத்தின் நாயகன் பஹத் பாசில். ஆனால் அறிவிக்கப்படாத கதாநாயகனாக நெடுமுடி வேணுதான் படம் முழுக்க கோலோச்சுவார். கதை கூட முழுக்க அவரை சுற்றித்தான் இருக்கும். இரவில் ரயிலில் அறிமுகம் ஆகும் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை ஆட்கொண்டுவிடுவார். அந்த அளவுக்கு பஹத் பாசிலை விட நெடுமுடி வேணுவே அதிகம் அசத்தியிருப்பார்.’செம்மீன்” சத்தியனின் புற்று நோய் மரணத்தின் போதும், திலகனின் வயது மூப்பு இழப்பின் போதும் கலாபன்மணியின் நஞ்சூட்டிய அகால கொலையின் போதும் இனி ஒருவர் இவர்கள் போல் வருவார்களோ என்று எம்மை ஏங்க வைத்தன.

அதனை விட பல மடங்கு மேலாக நெடுமுடி வேணுவின் மரணம் திரை உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும்.ஆனாலும் பஹத் பாசில், துல்கர் சன்மான், நிவின் புல்லி போன்றவர்கள் மலையாளத் திரைபட உலகில் மம்மூக்கா, லாலட்டன், ஜெயராமையும் மீறி யதார்த்;த சினிமைவை தாங்கிப் பிடித்து வருங்காலத்தை சிறப்பாகவே கொண்டு செல்வர் என்ற நம்பிக்கை மலையாளத் திரைப்படத்தின் தனித்துவமும் ஆகி இந்திய சினிமாவிற்கு வழி காட்டியாகவும் திகழத்தான் போகின்றது.

தமிழ் போல் தொன்மையான வரலாற்றை மலையாளம் கொண்டிருக்காவிட்டாலும் அவர்கள் தமக்கான கலாச்சாரத்தை மொழியை பிரதிபலிக்கும் ஒரு வலுவான திரைத்துறையை சிங்கள் மொழித் திரைப்படங்கள் போலவே உருவாக்கியிருப்பதன் சிறப்புகளில் நெடுமுடி வேணு போன்ற தலைசிறந்த நடிகர்களின் பங்கு மகத்தானது.கொரனா என்ற பெரும் தொற்றில் இருந்து மீண்டவர் வயது மூப்பு இயற்கையுடன் மோதிய நிகழ்வாக இறுதியில் இயற்கை வெல்ல நாம் நெடுமுடி வேணு என்ற மகா கலைஞனை இழந்து நிற்கின்றோம்.

அவருக்கு எமது மரியாதை கலந்த அஞ்சலி வணக்கங்கள்.மலையாள திரைப் படம் வாழும் வரை இந்திய சினிமா செயற்படும் வரை சினிமா என்பது உலக வழக்கில் இருக்கும் வரை நெடுமுடி வேணுவின் பெயர் மகா கலைஞனாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சிவா

Related Articles

பிரெஞ்சு சோசலிஸ்ட் அதிபர் வேட்பாளராக பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார்.62 வயதான அரசியல்வாதி, ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை அறிவித்தார்வியாழக்கிழமை இரவு கட்சி...

பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியாவில் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.75 வயதுடைய கிளிண்டன், செவ்வாயன்று யுசி இர்வின் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நல்ல...

பூமியைக் காப்பாற்றுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்

விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதைவிட, பூமியை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பிரெஞ்சு சோசலிஸ்ட் அதிபர் வேட்பாளராக பாரிஸ் மேயர்!!

பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டார்.62 வயதான அரசியல்வாதி, ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான தனது திட்டத்தை அறிவித்தார்வியாழக்கிழமை இரவு கட்சி...

பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கலிபோர்னியாவில் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.75 வயதுடைய கிளிண்டன், செவ்வாயன்று யுசி இர்வின் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நல்ல...

பூமியைக் காப்பாற்றுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்

விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதைவிட, பூமியை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ...

பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி

கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.பிரிட்டன் உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 12 மணியளவில்...

வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் வேட்டையாடப்படுவார்கள்

வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள், யாரும் தப்ப முடியாது என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.வங்காளதேசத்தில் இந்து கோயில்களில் துர்கா பூஜை விழா நடந்து வருகிறது. அங்குள்ள...