நைஜீரியாவில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றைத் தொடர்ந்து 281 சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளனர். அந்நாட்டின் ப்ரோனோ மாநிலத்தில் வெள்ளம் காரணமாக சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்து அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து 281 சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 7 சிறைக்கைதிகள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தப்பியோடிய 281 பேரைத் தேடி வருவதாகவும் பெரிஸார் தெரிவித்துள்ளனர். ப்ரோனோ மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் கடந்த 30 வருடங்களில் இல்லாதவாறு இம்முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.