நைஜீரியாவில் தீவிரவாத குழு தாக்குதல்

0
6

நைஜீரியாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த தீவிரவாத குழு நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளனர்.மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் புலானி என்ற முஸ்லிம் பழங்குடியின குழு அரசு மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறது. இவர்கள் அந்நாட்டில் உள்ள மற்றொரு தீவிரவாத குழுவான போக்கோ ஹராமில் இருந்து வேறுபட்டவர்கள். போக்கோ ஹராம் மேற்கத்திய கல்விக்கு எதிராகவும்இ இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தவும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

புலானி குழுவினர் நிலங்களை கைப்பற்ற பல ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் (15) பிளாட்டோ மாகாணத்தில் ஜிக்கே கிறிஸ்தவ பண்ணை குழுவினர் இருந்த பகுதிக்குள் புலானி குழுவினர் துப்பாக்கிகளுடன் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த, 51 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.